கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை! மீண்டு வா சகோதரர் என்று விராட் கோலி வாழ்த்து!

0
195
#image_title

கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை!! மீண்டு வா சகோதரர் என்று விராட் கோலி வாழ்த்து! 

நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகிய நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடியது.

தொடக்கப் போட்டியில் பீல்டிங் செய்யும் போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் அவர்களுக்கு முட்டியில் காயம் ஏற்பட்டது. முட்டியில் காயம் ஏற்பட்ட கேன் வில்லியம்சன் நடக்க முடியாத நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.

இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகள் எடுத்துக் கொண்ட கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்று அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதாக கேன் வில்லியம்சன் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக அறிவித்தார். இதற்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அவர்கள் விரைவில் குணமடைந்து வருவதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Previous articleகாங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டும் ஜெயிலர் பட நடிகர்! நான் இவருடைய ரசிகனாக வந்துள்ளேன் என பேச்சு!
Next articleரிலீஸ் ஆவதற்கு முன்பே 80 கோடிக்கு விற்பனை! கங்குவா திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரிப்பு!