கங்கனா ரனாவத் அறையப்பட்ட விவகாரம்: சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்லாப் போட்டோ உண்மையா?
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் அவர்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெறுள்ளார்.இந்நிலையில் கடந்த ஜூன் 06 அன்று டெல்லியில் நடைபெறவிருந்த NDA கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சண்டிகர் விமான நிலையத்தில் சென்றிருக்கிறார்.அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த சி.ஐஎஸ்.எஃப் பெண் காவலர் ஒருவர் கங்கனாவின் கன்னத்தில் பளார் என்று அறைவிட்டார்.இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.இதனை தொடர்ந்து கங்கனாவை அறைந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து குல்விந்தர் கவுரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விசாரணையில் வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை இழிவு படுத்தும் விதமாக கருத்துக்களை தெரிவித்ததால் தான் கங்கனாவை அறைந்தேன் என்று குல்விந்தர் கவுர் தெரிவித்திருக்கிறார்.
இநிலையில் கங்கனாவின் ஸ்லாப் போட்டோ என்ற பெயரில் சமூக வலைத்தங்களில் புகைப்படம் ஒன்று வேகமாக பரவி வருகிறது.அந்த புகைப்படத்தில் பெண் ஒருவரின் கன்னத்தில் ஐந்து விரல்கள் பதிந்து சிவந்தபடி இருக்கிறது.இந்த புகைப்படத்தில் இருப்பது கங்கனா தான் என்று சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.ஆனால் உண்மையில் அவை கங்கனாவின் ஸ்லாப் போட்டோ இல்லை.அவை கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஒரு கொசு ஸ்ப்ரேவின் விளம்பர புகைப்படம் என்பது தற்பொழுது தெரியவந்திருக்கிறது.