மீண்டும் திறக்கப்பட்ட கனியாமூர் பள்ளி! நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு! 

0
233
Kaniamoor School reopened! The order issued by the judges!
Kaniamoor School reopened! The order issued by the judges!

மீண்டும் திறக்கப்பட்ட கனியாமூர் பள்ளி! நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு!

கடலூர் மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் வன்முறையை வெடித்தது அதனை தொடர்ந்து பல்வேறு விதமான விசாரணைகள் நடந்தது.

மேலும் வன்முறையை தொடர்ந்து பள்ளியில் சீரமைப்பு பணிகள் முடிந்துவிட்டதாக பள்ளியை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அந்த வழக்கு விசாரணையின் முடிவில் 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 ஆம் வகுப்பு வரை ஒரு மாதத்திற்கு நேரடி வகுப்புகள் நடத்துவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஒரு மாதம் அப்போதைய நிலைமையை பொருத்து நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றும் எல்.கே.ஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் பள்ளியை திறப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை ,காவல்துறை ,மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் மாணவர்களின் நலன் கருதி நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.

அதனால் இன்று முதல் நேரடி வகுப்புகளை நடத்த  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி பள்ளியில் உள்ள ஏ பிளாக்கின் மூன்றாவது தளத்தை சீல் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.

அந்த உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மூன்றாவது தளத்திற்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.145 நாட்களுக்கு பிறகு பள்ளி இன்று திறக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளியின் முன்பு தோரணம் மற்றும் வாழைமரம் கட்டி மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபணிவு வேண்டாம், துணிவு போதும்..ஜெ நினைவு தினத்தில் தெலுங்கானா ஆளுநர் பதிவு..!
Next articleபேரூராட்சி வார்டு உறுப்பினரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்!