திமுகவில், நீண்ட கால அரசியல் வாதி கனிமொழியா? புதிய அரசியல் தலைவரான உதயநிதியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திமுக உள்பட திமுக கூட்டணி கட்சிகளும் அமோக வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி ஏற்றனர். கலைஞர் கருணாநிதி இறந்து ஓர் ஆண்டு நிறைவை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தினம் அறிவாலயத்தில் நடந்தது. இதற்கு சிறப்பு விருந்தினராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைக்கப்பட்டிருந்தார். இங்குதான் சலசலப்பை உண்டாக்கும் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பதற்காக திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். ஆனால் டெல்லியில் மக்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களும் மம்தா பானர்ஜியை அழைப்பதற்காக மும்முரமாக செயல்பட்டார்.
ஆனால், அறிவாலயம் கனிமொழியின் மும்முரத்தை தடுத்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மம்தா பானர்ஜியா அழைக்க செல்லவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் கட்டலையாம். இதனால் பெரிதும் சர்ச்சை எழுந்துள்ளது. கனிமொழி மும்முரதிர்க்கு தடை போட்டது ஏன் என்ற கேள்வி கனிமொழியின் ஆதரவாளர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் கனிமொழி அதிக அளவு அரசியல் ஈடுபாடு உள்ளவர். இதற்கு முன்னதாகவே மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி இன்று தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் உறுப்பினர் ஆக பதவி ஏற்றார். திமுக மகளீர அணி தலைவர் பொறுப்பில் உள்ளார். இது போதாதா கனிமொழியின் அரசியல் நிலைமை என கனிமொழி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எந்த அரசியல் முன் அனுபவம் இல்லாமல் தற்போதுதான் இளைஞர் அணி தலைவர் பதவியை ஏற்றார் அவருக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது. என கனிமொழி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது ஸ்டாலின் நிலைபாடு மற்றும் ஸ்டாலின் மகன் உதயநிதி அவர்களை அரசியலில் இனி முன்னெடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் நினைக்கிறாரோ கனிமொழியை ஓரம் கட்ட படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.