விஜயெல்லாம் எங்களுக்கு போட்டியா?!. நோ.. நோ.. சான்சே இல்ல!. கனிமொழி பதிலடி!..

Photo of author

By Murugan

விஜயெல்லாம் எங்களுக்கு போட்டியா?!. நோ.. நோ.. சான்சே இல்ல!. கனிமொழி பதிலடி!..

Murugan

kanimozhi

TVK DMK: விஜய் மேடைகளில் பேசுவதை பார்க்கும்போது கட்சி ஆரம்பித்ததே அவர் திமுகவை தோற்கடிப்பதற்காகத்தான் என தோன்றுகிறது. ஏனெனில், எந்த மேடையில் அவர் நாம் தமிழர் கட்சியையோ, அதிமுகவையோ, காங்கிரசையோ, பாஜகவையோ திட்டுவது இல்லை. சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழுவிலும் திமுகவை திட்டினார் விஜய். திமுகவை மன்னராட்சி என விமர்சித்தார்.

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பாக சொன்னால் போதாது அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே.. அணை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம்.. காற்றை தடுக்க முடியாது. மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவழியோ அல்லது சக்திமிக்க புயலாக மாறும்’ என பேசினார்.

மக்களை நாம் சந்தித்து குறைகளை கேட்டால் ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் தவெக கொடி தானாக பறக்கும். நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். தமிழ்நாட்டின் சகோதரிகள்தான் திமுகவின் அரசியலுக்கு முடிவு கட்ட போகிறார்கள். மன்னராட்சி முடிவுக்கு வரும்’ என பேசினார். அதோடு, ‘எங்களை பார்த்து பயம் இல்லையென்றால் ஏன் நாங்கள் மக்களை சந்திப்பதை தடுக்கிறீர்கள்?’ என கேள்வி எழுப்பினார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவுகும், திமுகவுக்கும் இடையேதான் போட்டியே’ என சொல்லி இருந்தார்.

இந்நிலையில், விஜய் பேசியது செய்தியாளர்கள் கனிமொழியிடம் கேட்டபோது ‘எல்லோரும் திமுகவையே போட்டியாக நினைக்கிறார்கள். உண்மையில் திமுகவிற்கு போட்டியாக யாருமே இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக வேறு எந்த தலைவரும் களத்தில் இல்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது’ என பேசியிருக்கிறார்.