கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்!

Photo of author

By Parthipan K

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மரணம்!

Parthipan K

அப்பு என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். இவர் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகம் ஆனவர் புனித் ராஜ்குமார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்க்காக 1985 லேயே விருது பெற்றவர்.

29 கன்னட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.

46 வயதான புனித் ராஜ்குமார் இன்று காலை உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் அவர் விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் உயிர் மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி பிரிந்தது.

46 வயதே ஆன புனித் ராஜ்குமார் மரணமடைந்தது திரை உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.