கன்னட நடிகர் திடீர் தற்கொலை.! ஊரடங்கால் மன அழுத்தம் காரணமா.?

0
170

கன்னட தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலம் ஆனவர் சுஷீல் கவுடா. அந்தப்புரா என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பரிட்சயமானார். மாண்டியாவில் வசித்து வந்த சுஷீல் உடற்பயிற்சி போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது 30 வயதில் நல்ல உடற்கட்டை பயிற்சி மூலம் வைத்திருந்தார்.

இந்த சூழலில் நேற்று சுஷீல் கவுடா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது திடீர் தற்கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இளம் வயதில் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு என்னதான் பிரச்சினை என்று பலரும் வருத்தத்துடன் கருத்து தெரிவிக்கின்றனர். அவரது நடிப்பில் சலாகா என்னும் திரைப்படம் கடைசியாக நடித்து முடித்து இன்னும் வெளியாகவில்லை.

அவரது நண்பரான துனியா விஜய் என்பவர் கூறுகையில், அவரை முதன்முதலாக பார்த்தபோது சினிமாவில் நல்ல இடத்திற்கு முன்னேறுவார் என்று நினைத்தேன். அவரது கடைசி படம் வெளியாவதற்குள் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. கொரோனா ஊரடங்கினால் மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். தொடர் மரணங்கள் இந்த ஆண்டு முடிவடையாது என்று நினைப்பதாக கூறினார்.

அண்மையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தனது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டது இந்திய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கன்னட நடிகர் சுஷில் கவுடா தற்கொலை சம்பவம் சின்னத்திரை மற்றும் கன்னட நடிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous article“பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” தமிழகம் முழுவதும் தடை; முற்றுப்புள்ளி வைத்த சாத்தான்குளம் சம்பவம்!
Next articleகளைகட்டிய மூலிகை மைசூர்பாக் விற்பனை; கடைக்கு சீல் வைத்த உணவுத்துறை அதிகாரிகள்.!!