போதை பொருள் கடத்தியதாக நடிகைகள் மீது வழக்கு! வசமாக சிக்கினர்!
கன்னட திரையுலகில் நடிகை,ராகினி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியுள்ளனர்.இவர்களுக்கு எதிராக பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.இந்த சம்பவத்தால் கன்னட திரையுலகம் பரபரப்பாக உள்ளது.ஏற்கனவே போதைப் பொருள் விவகாரத்தில் கன்னட திரையுலகம் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னட திரையுலகில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர்கள்,தயாரிப்பாளர்கள்,மென்பொருள் பொறியாளர்கள் என மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த கைது நடவடிக்கையால் இந்திய திரையுலகமே அதிர்ச்சி அடைந்தது. இந்த 12 பேரில் கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றொரு நடிகை ராகினி திவேதி போதைப்பொருள் விருந்துகளை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படும் விரேன் கன்னா,முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் அல்வாவின் மகன் ஆதித்யா அல்வா மற்றும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயின் உறவினர் ஒருவர் உள்ளிட்ட பல நபர்கள் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் ஆவார்.
இந்த வழக்கில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகியோர் மூன்று மாதங்கள் சிறையில் இருந்தனர்.சிறையிலிருந்து ஜாமீன் மூலமாக அவர்கள் வெளியே வந்து விட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது.மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர்கள் இரண்டு பேரின் போதிப்பொருள் பயன்பாட்டை உறுதி செய்வதற்கு பரிசோதனையை மருத்துவர் குழு கொண்டு நடத்தினர்.அந்த பரிசோதனையில் சிறுநீர் மற்றும் தலைமுடி ஆகியவற்றைக் கொண்டு பரிசோதனை செய்ததில் அவர்கள் இருவரும் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத் போலிஸ் கமிஷனர் கமல் பந்த் இந்த தகவலில் மத்திய குற்றப்பிரிவு போலிசாரின் கடும் முயற்சியால் இந்த பரிசோதனையின் முடிவு தற்போது கிடைத்துள்ளது.இதேபோல் இந்த வழக்கில் தொடர்புடைய பலரையும் விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.