கன்னடத்து பைங்கிளியையே கலாய்த்த வடிவேலு!! சிக்கிய இயக்குனர்!!

Photo of author

By Gayathri

கன்னடத்து பைங்கிளியையே கலாய்த்த வடிவேலு!! சிக்கிய இயக்குனர்!!

Gayathri

Kannada Bingli is the same Vadivelu!! Trapped Director!!

முன்னணி மூத்த நடிகை சரோஜாதேவி 1955 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் தமிழ் திரையுலுகினரால் கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்றெல்லாம் போற்றப்பட்டுள்ளவர். இவர் பல திரைப்பட விருதுகளையும், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார். இவர்கள் நடிப்பில் கடைசியாக, நடிகர் சூர்யாவின் பாட்டியாக ஆதவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், பல வெற்றி படங்களை இயக்கி உள்ள கே. எஸ். ரவிக்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப் பிரபலமானது.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது, வடிவேலு சரோஜாதேவி அம்மாவை வர்ணிக்க வேண்டி ஒரு காமெடி சீன் இடம் பெற்றிருந்தது. அந்த சீனின் டயலாக் குறித்து சரோஜா அம்மாவுக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டுள்ளது. அந்த சீனில் வடிவேலு, மேலே போ ஃபுல் மேக்கப்பில் அங்கே ஒரு அம்மா படுத்து இருக்கும் என்ற டயலாக் ஸ்கிரிப்டில் இடம் பெறாதது. அந்த டயலாக்கை வடிவேலுவே அச்சமயத்தில் கூறியுள்ளார். இது நன்றாக உள்ளது என அங்குள்ளவர்களும் ஸ்கிரிப்ட்டில் சேர்த்துக் கொண்டுள்ளனர்.

படம் வெளியிட்ட பிறகு இந்த சீனை பார்த்த சரோஜா அம்மா படுங்கோவத்தில் துணை இயக்குனருக்கு கால் செய்துள்ளார். அழைப்பில் இணைந்த துணை இயக்குனர் ரமேஷ் கண்ணாவிடம், ஏப்பா நான் உங்ககிட்ட நடிக்க சொல்லி வாய்ப்பு கேட்டேனா! நீங்கதான கூப்பிட்டீங்க! இப்போ இப்படி டயலாக் வச்சிருக்கீங்க! என்று திட்டியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியான ரமேஷ், சரோஜா அம்மாவை சமாதானம் செய்துள்ளார். இதுகுறித்து அவரே ஒரு நிகழ்ச்சியில், அம்மா இப்படி கேட்கவும் பயந்தே போயிட்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.