சிறந்த பாடல்களை இயற்றி காலத்தால் அழியாத இடம் பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். இவர் எம்ஜிஆர் சிவாஜி முதல் கமலஹாசன் வரை தலைசிறந்த நடிகர்களுக்கு தன்னுடைய சிறப்பு மிக்க பாடல் வரிகளால் பெயர் பெற்று கொடுத்தவர் என்பதில் ஐயமில்லை. அப்படிப்பட்ட கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு கண் கண்ட தெய்வமாக விளங்குபவர் இவர்தான் என அவரே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
யார் அந்த கண்கண்ட தெய்வம் ? கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஏன் அவரை தினமும் தொழுவதாக கூறி இருக்கிறார். அப்படி என்ன அவருக்கு சிறப்பு என்பதனை இந்த பதிவில் காண்போம்.
கண்ணதாசன் அவர்களுக்கு முதல் முதலில் வாய்ப்பு வழங்கியது இயக்குனர் கே ராமநாத் அவர். இவருடைய இயக்கத்தில் 1949 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான ” கன்னியின் காதல் ” என்ற திரைப்படத்தில் இவர் கண்ணதாசன் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கவே அதன் மூலம் தமிழ் சினிமா துறையில் புகழின் உச்சியை அடைந்தவர் கண்ணதாசன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
இது குறித்து கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
இயக்குனர் கே ராமநாத் அவர்கள் எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால் நான் இந்த இடத்தில் இருந்திருப்பேனா என்பது சந்தேகமே. எனக்கு கண் கண்ட தெய்வம் இவர்தான். இன்று வரையில் நான் இவரை தொழுது கொண்டுதான் இருக்கிறேன் என்று கூறியவர், கோபியில் இருக்கும் பொழுது அடிக்கடி இவருடைய வீட்டிற்கு சென்று இவருக்கு நன்றி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
அதற்கு இயக்குனர் அவர்கள் உங்களுடைய திறமையால் நீங்கள் சாதித்துள்ளீர்கள் என்று கூறி இருக்கிறார். அதற்கு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை ஒருவேளை அவ்வாறு கிடைத்துவிட்டால் அவர்களிடத்தில் திறமை இருப்பதில்லை என்று கூறியுள்ளார்.