கோவை மாவட்டம் இருகூர் காமாட்சி புறத்தை சேர்ந்தவர் கண்ணன்.இவர் அரசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில்கண்ணனுக்கு இரண்டு நாட்களாக காச்சல் இருந்து வந்துள்ளது.எனவே கண்ணன் தனக்கு கொரோனா தொற்று வந்து விட்டதாக எண்ணி உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறி புலம்பியுள்ளார்.
மேலும் தான் இனிமேல் உயிரோடு இருக்க போவதில்லை எனவும் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றும் கூறியுள்ளார்.இதனை அடுத்து இன்று காலை 10 மணி அளவில் வெளியே சென்ற கண்ணன் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அனைவரும் கண்ணனை தேடியுள்ளனர்.
இந்நிலையில் இருகூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மோதி வாலிபர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்தன.மேலும் அந்த வாலிபர் கண்ணன் என்பதும் தெரிய வந்தது.இவர் கோவை நோக்கி வந்த சரக்கு ரயில் மோதி உயிரிழந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கொரோனா அச்சம் காரணமாக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.