கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண் கைது! காரணம் இதுதானா?

0
114
Kanyakumari district woman arrested for arguing in police station! Is this the reason?
Kanyakumari district woman arrested for arguing in police station! Is this the reason?

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண் கைது! காரணம் இதுதானா?

கன்னியாகுமரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்பின் (32). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி குழித்துறையை அடுத்தவெட்டுமணி பகுதியில் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சி அவரை மீட்ட குடும்பத்தினர் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை கதா அனுமதித்து அங்கு சிகிச்சை பெற்று வந்தபோது மார்த்தாண்டம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆக இருந்த சுரேஷ்குமார் அவரிடம் வாக்குமூலம் பெற்று போலியான கையெழுத்திட்டு ஏமாற்றி விட்டதாகவும் நாகர்கோவில் உள்ள எஸ் பி அலுவலகத்தில் ஜோஸ்பின் புகார் அளித்திருந்தார்.

மேலும் இந்த புகாரின் பேரில் கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகம் மூலம் மதுரை தடவியல் குழுவினர் அந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று ஜோஸ்வின் மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு வந்து தகராறு ஈடுபட்டுள்ளார். மேலும் தனக்கு அந்த ஆவணங்கள் தேவை எனக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அந்த நேரத்தில் பணியில் இருந்த ஏட்டு தீபா ஆவணங்கள் அனைத்தையும் மதுரை தடவியல் குழுவினரிடம் ஒப்படைத்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அதனை கேட்காமல் ஜோஸ்பின் அங்கு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார் இதனையடுத்து ஏட்டு தீபா கொடுத்த புகாரின் பேரில் காவல் நிலையத்தில் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி ஜோஸ்பின் மீது வழக்கு பதிவு செய்து ஜோஸ்வின் கைது செய்யப்பட்டுள்ளார்.

author avatar
Parthipan K