சாதனையை முறியடித்த அஸ்வின்! பாராட்டு தெரிவித்த கபில்தேவ்!

0
144

இந்தியா, இலங்கை, உள்ளிட்ட அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலமாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவின் 434 விக்கெட் என்ற சாதனையை முறியடித்திருக்கிறார். இதன் காரணமாக, அவருக்கு எல்லோரும் பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள், அஸ்வின் எண்பத்தி ஐந்து போட்டிகளில் 436 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், தன்னுடைய சாதனையை முறியடித்த அஸ்வினுக்கு கபில்தேவ் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, இந்திய அணியில் சமீபகாலமாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சரியான விதத்தில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

ஆனாலும் அவர் மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார். அவருக்கு தொடர்ந்து அணியில் இடம் கொடுத்திருந்தால் எப்போதோ இந்த இலக்கை அவர் எட்டியிருப்பார் என்று தெரிவித்திருக்கிறார்..

அதிக விக்கெட் எழுதியவர்களின் பட்டியலில் பல வருடகாலமாக என்னிடம் இருந்த 2வது இடத்தை அஸ்வின் பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, அஸ்வின் வியக்கத்தக்க வீரர் மிகச்சிறந்த புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர் அடுத்ததாக அவர் 500 விக்கெட் என்ற இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

இதனை அடைவதற்கான முயற்சியை அவர் மேற்கொள்ள வேண்டும். இதில் அவர் கட்டாயமாக சாதிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். ஒருவேளை அதையும் கடந்து அவர் அசத்துவதற்க்கான வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleசர்வதேச பெண்கள் தினம்! மணல் சிற்பம் வரைந்து அசத்திய நபர்!
Next articleஉளவு பார்த்த ரஷ்ய அதிகாரிகள்? 50 தூதரக அதிகாரிகளை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றிய ஜோ பைடன்!