சர்வதேச பெண்கள் தினம்! மணல் சிற்பம் வரைந்து அசத்திய நபர்!

0
86

பெண்கள் சமூகத்திற்கு செய்துவரும் சேவை மற்றும் அர்ப்பணிப்பு இன்றியமையாத தேவைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு வருடம் தோறும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பெண்களின் தனித்தன்மை மற்றும் சிறப்பு, அவர்களுடைய தைரியம், தன்னம்பிக்கை உள்ளிட்டவற்றை நினைவுகூரும் விதமாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு தனி சிறப்பு சேர்க்கும் விதத்தில் வருடம் தோறும் என்னதான் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும், ஆண்டுதோறும் அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறதே தவிர குறைவதாக தெரியவில்லை.

உள்நாட்டிலும் சரி, சர்வதேச சமூகத்திலும் சரி, பெண்களுக்கு போதுமான பாதுகாப்பில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. அவர்களைப் பாதுகாப்பதற்காக அரசுகள் பல்வேறு சட்டங்களை அறிவித்தாலும் அந்த சட்டத்திலிருந்து எப்படியாவது குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள்.

ஆனால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாதவாறு எந்தவிதமான சட்டத்தையும் இயற்றுவதற்கு அரசாங்கங்கள் தயாராக இல்லை என்பதுதான் உண்மையாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், பிரபல மணல் சிற்ப கலைஞரான மனாஸ் குமார் சாஹூ சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பூரி கடற்கரையில் ஒரு மணல் சிற்பத்தை வடிவமைத்திருக்கிறார் என்ற தலைப்பில் அவரும் அவருடைய குழுவினரும் ஒன்றாக இணைந்து 15 அடி அகலமான மணல் சிற்ப்பத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.

15 டன் மணலை கொண்டு 7 மணி நேர வேலை செய்து இந்த சிறப்புசத்தை வடிவமைத்திருக்கிறார்கள். பெண்கள் தொடர்பாக தெரிவித்த இவர் இந்த தலைமுறையில் பெண்கள் பல்வேறு துறையில் தங்களுடைய திறமையை நிரூபித்திருக்கிறார்கள் எந்தத் துறையிலும் பெண்கள் பின் தங்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்