வெளியான கருத்து கணிப்பு! பெரு மகிழ்ச்சியில் பாஜகவின் முக்கிய புள்ளி!

Photo of author

By Sakthi

நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் களமிறங்கிய தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், தேர்தல் முடியும் வரையில் எந்த ஒரு கருத்து கணிப்பு வெளியிட கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.இருந்தாலும் நடைமுறை வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யார் பக்கம் இருக்கிறது என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த விதத்தில் தமிழகத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்பை பார்த்தோமானால் அதிமுக கூட்டணி எதிர்வரும் சட்டசபை தேர்தலில் 124 இடங்களை கைப்பற்றி மறுபடியும் தமிழ்நாட்டில் ஆட்சியை தக்கவைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல திமுக கூட்டணி 94 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக மாறும் மேலும் 16 இடங்களில் திமுகவிற்கு இது வரை நீடிக்கும் என்று தெரிவித்திருக்கிறது அந்த கருத்துக் கணிப்பு.அதேபோல காரைக்குடி சட்டசபைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக பாஜகவை சார்ந்த எச் ராஜா போட்டியிட இருக்கிறார்.
அவர் சுமார் 49 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி பாஜக 49 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி அடையும் என்றும், காங்கிரஸ் கட்சி 47 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும் என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சுமார் ஒரு சதவீத வாக்குகளை பெறும் என்றும், நாம் தமிழர் கட்சி இரண்டு சதவீத வாக்குகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.