இந்தியாவின் நிலை இந்நாளில் தான் நிலைநிறுத்தப்பட்டது! கார்கில் 20 இன்று! கார்கில் வரலாறு

0
154

இந்திய தனது இராணுவத்தின் திறனையும், வலிமையையும் நிரூபித்த கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட் அருகே கார்கில் போரில் உயிர் விட்ட வீரர்களின் தேசிய போர் நினைவகத்தில் முப்படை வீரர்களின் சார்பில் வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில், ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், விமானப் படைத் தளபதி பி.எஸ்.தனோவா, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.பி.மாலிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மே 1999இல் பாகிஸ்தான் இராணுவமும் காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு முக்கிய காரணமாகும். போரின் ஆரம்பத்தில் பாகிஸ்தான், பழியை முற்றிலுமாக காஷ்மீரி போராளிகள் மீது சுமத்தியது. ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலமாகவும், போருக்குப்பின் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள் மூலமாகவும், பாகிஸ்தான் துணை இராணுவப் படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில் போரில் ஈடுபட்டிருந்தது உறுதியானது.

 இந்திய வான்படை துணையோடு, இந்திய தரைப்படை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போராளிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதிகளை மீட்டது. சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன.

60 நாட்கள் நடைபெற்ற இந்த சண்டை, ஜூலை 26-ம் தேதி முடிவடைந்தது. இந்தியப் பகுதிகளை ராணுவம் மீட்டது. கார்கில் வெற்றி தினத்தையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு இந்திய ராணுவம் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

கார்கில் போரில் தனது கால்களை இழந்த ராணுவ வீரர், தனது குடும்பத்துடன் வந்து இந்த வெற்றித் தினம் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலிகார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

அதில், இந்திய ராணுவ வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்நாள் நமது வீரர்களின் தைரியம், துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பை நினைவூட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில், நாட்டின் பாதுகாப்புக்கு ஆதரவளித்த அந்த வலிமை மிக்க வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். வாஜ்பாய் தலைமையில் இந்த போர் நடத்தப்பட்டது. இந்த போரின் மூலம் இந்திய வான்படை, தரைப்படை, ஆய்தபடை ஆகியவற்றை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இதில் உயிர்நீத்த அனைத்து வீரர்களுக்கும் இரங்களை தெரிவித்து கொள்வோம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleஅப்போ எதிர்த்தோம் இப்போ ஆதரிக்கிறோம்! நாடாளுமன்றத்தில் அதிமுக நிலை?
Next articleபுது டுவிஸ்ட்! ஆட்சியை கவிழ்த்தது காங்கிரஸ், எங்களுக்கு எதும் தெரியாது. MLA கள் பகிர்?