வாள் தூக்கி வருகிறான் கர்ணன்!! முதல்முறையாக தொலைக்காட்சிகளில் எப்பொழுது வெளியாகிறது தெரியுமா??
தமிழ் திரையுலகின் பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். மேலும் இவர் பரியேறும் பெருமாள் என்ற தமிழில் பல விருதுகளை வாங்கிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். தனுஷ் நடித்துள்ள கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். பத்து வருடங்களுக்கும் மேலாக இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். பத்திரிகையாளராகவும் சில வருடங்கள் பணிபுரிந்தார். ஆனந்த விகடனில் மறக்க நினைக்கிறேன் என்றார் தொடரை எழுதி உள்ளார்.
மேலும் மாரி செல்வராஜ் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயத்தை தொழிலாகக் கொண்ட பெற்றோருக்கு பிறந்தவர். வறட்சி நிலங்களில் இவரது தந்தை வெளியூர்களுக்கு சென்று வேடமிட்டு ஆடியிருக்கிறார். சென்னைக்கு வந்து ராமிடம் உதவி இயக்குனராக சேர்ந்து 3 படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார் மாரிசெல்வராஜ். மேலும் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தை முதல் முதலில் இயக்கினார். இதைத் தொடர்ந்து இவர் அண்மையில் கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை தனுஷ் நடிப்பில் உருவாக்கியிருந்தார். மேலும் இந்தப் படம் கொரோனா தொற்று காரணமாக ஓடிடியில் வெளியானது.
கதை மற்றும் வசூல் ரீதியாக படம் பெருமளவில் வரவேற்பை பெற்றது தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய பிரச்சனையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இதுவரை ஓடிடி மட்டும் ஒளிபரப்பப்பட்ட இப்படத்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த படத்தில் வரும் பாடல்களை அவ்வப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பும். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் சில படப்பிடிப்பு தருணத்தையும் வெளியிட்டு வந்தது. இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வாள் தூக்கி வருகிறான் கர்ணன் என்ற தலைப்பில் கர்ணன் படம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் உள்ளது என்பதை தெரிவித்துள்ளது. ஆனால் என்று என்பதை தெரிவிக்கவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் உள்ளன. கண்டிப்பாக ஏதாவது ஒரு அரசு விடுமுறை தினம் அல்லது சிறப்பு நாட்களில் தான் வெளியாகப் போகிறது என்பது தெரிகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கர்ணன் படம் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.