நாளை கர்ணன் கண்டிப்பாக வருவான்! தயாரிப்பாளரின் சூப்பர் ட்விட்!

Photo of author

By Rupa

நாளை கர்ணன் கண்டிப்பாக வருவான்! தயாரிப்பாளரின் சூப்பர் ட்விட்!

திரையுலகில் மாஸ் நடிகர்களுக்கு என்றும் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதில் ஒருவர்தான் தனுஷ். இவர் கிராமம் சார்ந்த படங்களை நடிக்கும்பொழுது அதிக அளவு பாராட்டையும் புகழையும் பெறுகிறார். அந்த வகையில் சென்ற வருடம் வெளியான படம் தான் அசுரன். அது அதிக அளவு வசூல் வேட்டையை தந்தது. தேசிய விருதுக்கு அந்த படம் பரிந்துரை ஆனது. அதற்கடுத்து தற்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் நாளை வெளிவரவிருக்கும் படம் தான் கர்ணன்.

இந்தப் படத்தின் பாடல் வெளியாகி அதிகளவு பிரபலமடைந்தது. அதுமட்டுமின்றி இப்படத்தில் வரும் ஒரு பாட்டு நீதிமன்றத்திற்கு வரைச்சென்று படம் ரிலீஸ் ஆவுவதே பெரும் கேள்விக்குறியாக இருந்தது. அதற்கு தக்க பதிலடி கொடுத்து படம் வெளிவரும் என பட இயக்குனர் தெரிவித்தார்.அந்த வகையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அந்த போடப்பட்ட கட்டுப்பாடுகளில் திரையரங்குகளில் படம் பார்க்க வருவோர் தகுந்த விதிமுறைகளைப் பின்பற்றி 50% மட்டுமே இருக்கையில் உட்கார அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் இப்படத்தின் வசூல் வேட்டை சற்று குறைந்து காணப்படும் அல்லது படம் வெளிவருமா என்று பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு அவரது முகநூல் பக்கத்தில் ட்வீட் ஒன்றை போட்டு உள்ளார். அதில் அவர் கூறியது, சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும். எந்தவித மாற்றமும் இல்லை. அரசு கூறிய அனைத்து கட்டுப்பாடுகளுடன் இப்படம் திரையரங்குகளில் திரையிடப்படும் என கூறினார். கர்ணன் படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று உருக்கமாக கூறி இருந்தார்.

இந்த பதிவைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படம் ஒரு ஜாதியை குறிப்பிட்டு எடுக்கப்பட்டுள்ளது என பலராலும் பேசப்பட்டு வருகிறது. தனுஷ் ரசிகர்கள் அனைவரும் நாளை கர்ணன் வரப் போகிறான் என்று ட்வீட் போட்டு அன்பை பரிமாறி வருகின்றனர்.