இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்!!

Photo of author

By Savitha

இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை கூட்டம்! எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்!
இன்று நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர்.
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து பெங்களூருவில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் சித்தராமையா முதலமைச்சராகவும் டி கே சிவக்குமார் துணை முதலமைச்சராகவும், 8 அமைச்சர்களும்  பதவியேற்றுக் கொண்டனர்.
இதற்கு மத்தியில் இன்று நடைபெற்ற கர்நாட சட்டப் பேரவை கூட்டத்தில் தற்காலிக அவை தலைவராக காங்கரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.வி தேஷ்பாண்டே அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி தேஷ்பாண்டே அவர்களுக்கு தற்காலிக அவைத் தலைவராக பதவிப் பிராமணம் செய்து வைத்தார்.
இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் சித்தராமையா அவர்களும் துணை முதல்வர் டே.கே சிவக்குமார் அவர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.