இரவு நேர ஊரடங்கு ரத்து- கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Vijay

இந்தியாவில் மகாராஷ்டிராவை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, கொரோனாதொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜனவரி 7-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை வாராந்திர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால் இதுவரை அமலில் இருந்த வாராந்திர ஊரடங்கு உத்தரவை ரத்து செய்வதாக அரசு அறிவித்தது.

இந்நிலையில், தொற்று பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல் மந்திரி பசவராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், கர்நாடகாவில் இரவுநேர ஊரடங்கு வரும் 31-ம் தேதி முதல் ரத்து செய்யப்படும் என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். மேலும், 31-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.