முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம்! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

0
120

கர்நாடக மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு  நகரப் பகுதிகளில் ரூ.1000மும், கிராமப் புறங்களில் ரூ.500ம் அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 6.12 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 9 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை. கர்நாடக மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு நகரப் பகுதிகளில் ரூ.200ம், கிராமப் புறங்களில் ரூ.100ம் அபராதம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நகரப் பகுதிகளில் ரூ.1000மும், கிராமப் புறங்களில் ரூ.500 ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில தலைமைச் செயலர் விஜயபாஸ்கர்,
கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பெங்களூரு, குல்பர்கா, மங்களூரு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து எந்தவித இறுதி முடிவும் எடுக்கவில்லை.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பது போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்டு வந்த அபராதத் தொகை தற்போது நகரப் பகுதிகளில் ரூ.1000மும், கிராமப் புறங்களில் ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் அதிக அளவில் அபராதத் தொகை வசூலிப்பதற்கு பொதுமக்களும், சமூகநல அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Previous articleபனானாஷால் நிறைந்த முரட்டு குத்து- 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! குதூகலத்தில் அடல்ட்ஸ்!
Next articleஹரிஷ் கல்யாண் படத்துக்கு டைட்டில் வச்சாச்சு! ரிலீஸுக்கு வெயிட்டிங்!