கர்நாடகா குமாரசாமி ஆட்சி தப்புமா? இன்று இறுதி தீர்ப்பு!

Photo of author

By Parthipan K

கர்நாடகா குமாரசாமி ஆட்சி தப்புமா? இன்று இறுதி தீர்ப்பு!

Parthipan K

Updated on:

கர்நாடகா குமாரசாமி ஆட்சி தப்புமா? இன்று இறுதி தீர்ப்பு!

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடர்ந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்காததன் மூலம், அரசுக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கச் செய்ய சபாநாயகர் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இன்று காலை 10.30 மணிக்கு உத்தரவு பிறப்பிப்பதாக உத்தரவிட்டனர். குமாரசாமி அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில் ஆளும் அரசின் பலம் 101ஆக குறையும். அதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சி கவிழும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, பெங்களூருவில் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏக்களுடன் பாஜக தலைவர் எடியூரப்பா கிரிக்கெட் விளையாடினார். அதனைத் தொடர்ந்து நேற்றிரவு பாஜக எம்.எல்.ஏக்கள் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எடியூரப்பா இசை நிகழ்ச்சியை ரசித்தார்