புது டுவிஸ்ட்! ஆட்சியை கவிழ்த்தது காங்கிரஸ், எங்களுக்கு எதும் தெரியாது. MLA கள் பகிர்?

Photo of author

By Parthipan K

கர்நாடகாவில் ஒரு மாதமாக யார் அட்சி செய்வார்கள் என குழப்பம் நிலவியது. 16 சட்டமன்ற உறுப்பினர் அரசுக்கு எதிராக செயல் பட்டதால் சட்ட சபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்பு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. கர்நாடகாவில் நடைபெற்று வந்த உச்சக்கட்ட அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. அதில் ஒவ்வோரு வரிசையாக அரசுக்கு ஆதரவளிப்பவர்கள் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது.

அதேபோல அரசுக்கு எதிராக ஆதரவளிப்பவர்கள் எழுந்து நின்று வாக்களித்தனர். இறுதியில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தது. அவையில் மொத்தம் 204 உறுப்பினர்கள் இருந்தனர். பெரும்பான்மைக்கு தேவையான 103 உறுப்பினர்களை பெறாத காரணத்தினால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து முதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் குமாரசாமி ராஜினாமா கடிதத்தை ஏற்கப்பட்டது என ஆளுநர் அறிவித்தார்.
இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேர் மும்பையில் இருந்து பெங்களூர் திரும்பினார். அதன்பிறகு செய்தியாளருக்கு பேட்டி அளித்தபோது அவர்கள் கூறியவை, சித்தராமையாவின் வழிகாட்டுதலின்படியே எம்எல்ஏக்கள் பதவி மட்டும் ராஜினாமா செய்துவிட்டு. பிறகு மும்பையில் சென்று விட்டோம்.

பாஜகவுடன் நாங்கள் தொடர்பில்லை. மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைப்பது தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் எல்லாரும் காங்கிரசில் தான் இருக்கிறோம். என்றும் சித்தராமையா தான் எங்கள் தலைவர். சிறிது நாட்கள் மட்டும் எங்களை கட்சியில் இருந்து விலகுமாறு சித்தராமையா கூறியிருந்தார்.
அவர் கூறியது போல் நடந்து கொண்டோம். சித்தராமையா முடிவின் படி எதிர்காலத்தில் நடந்துகொள்வோம்.

சித்தராமையா கூறியதால் தான் நாங்கள் ராஜினாமா செய்தார் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். இது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியே குமாரசாமி ஆட்சியை கலைத்து விட்டதோ என்ற சந்தேகம் கர்நாடகா மக்களிடையே எழுந்துள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.