வடிவேலு பாணியில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் சட்டசபையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்! அவையில் ஏற்பட்ட சிரிப்பலை!

0
191

ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு கார் கதவை திறந்து விட்டு வெளியே வருவார் அவர் வருவதை பார்த்து அங்கு இருக்கும் அனைவரும் தெறித்து ஓடுவார்கள், இதனை கண்டு தன்னை பார்த்து பயந்து ஓடுவதாக எண்ணிக் கொள்ளும் வடிவேலு கெத்தா நடந்து வருவதாக நினைத்து வந்து கொண்டிருப்பார்.

ஆனால் இறுதியில் பார்க்கும்போது அவருடைய வேட்டி கார் கதவில் மாட்டிக் கொண்டு இருப்பதால் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் இவ்வாறு நடந்து வந்திருப்பார். இதன் காரணமாக, தான் மற்றவர்களெல்லாம் இவரைக் கண்டு பயந்து ஓடுவார்கள்.

அப்படி ஒரு சம்பவம் கர்நாடக மாநில சட்டசபையில் நடந்தேறியிருக்கிறது. கர்நாடகாவில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் 8-வது நாளான நேற்று அவை ஆரம்பித்ததும் முதலில் கேள்வி நேரம் தொடங்கியது. அதன் பின்னர் பூஜ்ஜிய நேரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அந்த சமயத்தில் மைசூர் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக உரையாற்ற ஆரம்பித்தார். ஒரு நபர் அந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை பேசிக்கொண்டே வந்தார். அந்த சமயத்தில் தான் ஒரு விஷயம் நடைபெற்றது.

அவர் பேசுவதில் ஆர்வமாக இருந்ததால் தன்னுடைய வேட்டி அவிழ்ந்தது பற்றி கூட கவலைப்படாமல் இருந்திருக்கிறார். இதை அதே வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி கே சிவகுமார் கவனித்து சில வினாடிகள் காத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அவர் பொறுமையாக காத்திருந்து எதுவும் நடக்கவில்லை. வேட்டியை சரி செய்யாமல் முன்பை விடவும் சுவாரஸ்யத்துடன் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த நபர் ஒரு கட்டத்தில் அவர் அருகே சென்ற சிவகுமார் உங்க வேஷ்டி அவிழ்ந்து விட்டது என்று காதருகில் சென்று கூறியிருக்கிறார்.

அதன்பின்னர்தான் அவருக்கு நடந்த விபரீதம் தெரியவந்திருக்கிறது, உடனடியாக அதனை சரி செய்து இருக்கின்றார் அப்போது தன்னுடைய பேச்சை நிறுத்தாமல் அமைச்சர் ஈஸ்வரப்பாவை பார்த்து வேட்டி அவிழ்ந்து விட்டது உடல் எடை கூடியும் ஒரு சில சமயம் இப்படி நடந்து விடுகிறது என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் காரணமாக, அங்கு சிறிது நேரம் கலகலப்பு காணப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

நூற்றுக்கணக்கான சட்டசபை உறுப்பினர்கள் கூடியிருக்கும் ஒரு சட்டசபையில் இப்படி தன்னுடைய வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிக் கொண்டிருந்த அந்த முக்கிய நபர் யார் என்றால் கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா தான் அந்த முக்கிய நபர்.

வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறாரே ஒரு எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்புடன் நடந்து கொள்வது கிடையாதா என்ற கேள்வி மனதில் இருந்தாலும், அவர் தான் எடுத்துக்கொண்ட விஷயத்தில் அந்த அளவிற்கு கவனமாக இருந்ததன் காரணமாக, தன்னுடைய வேஷ்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் அந்த விஷயத்தில் ஒன்றிப்போய் இருக்கிறார் என்ற கோணத்தில் கவனித்தால் இது பெரிய விஷயமாக தெரியவில்லை.

Previous article21 ஆயிரம் தீப்பெட்டிகள் காட்டியது இவர் முகத்தை தான்! மாணவர்கள் படைத்த உலக சாதனை!
Next articleபாலிடெக்னிக் மற்றும் பி.எஸ்சி முடித்த மாணவர்கள் கவனத்திற்கு! இன்று முதல் இது தொடக்கம்!