கார்த்தி-ஜோதிகா ‘தம்பி’ படத்தின் இரண்டு முக்கிய அறிவிப்புகள்

Photo of author

By CineDesk

கார்த்தி-ஜோதிகா ‘தம்பி’ படத்தின் இரண்டு முக்கிய அறிவிப்புகள்

கார்த்தி, ஜோதிகா முதல்முதலில் இணைந்து நடித்த ’தம்பி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படம் அனேகமாக டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த படத்தை நேற்று இரவு பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இன்று அல்லது நாளை இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ’தம்பி’ படத்தின் பாடல்கள் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 படத்தின் மூலம் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கோவிந்தா வசந்தா அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கியுள்ளார். அக்கா தம்பி கேரக்டர்களில் கார்த்தி மற்றும் ஜோதிகாவும், அப்பா கேரக்டரில் சத்யராஜ் நடித்துள்ள இந்தப் படம் ஒரு த்ரில், சஸ்பென்ஸ் படம் என்று கூறப்படுகிறது

தம்பி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் அதே டிசம்பர் 20ஆம் தேதி தான் சிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.