கைதி 2 படத்தில் ரோலக்ஸோடு மோதல்…. கார்த்தி பகிர்ந்த சூடான அப்டேட்!

Photo of author

By Vinoth

கைதி 2 படத்தில் ரோலக்ஸோடு மோதல்…. கார்த்தி பகிர்ந்த சூடான அப்டேட்!

கைதி 2 திரைப்படம் விரைவில் உருவாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்திற்கு பின்னர் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. இந்த படம் தீபாவளி நாளில் விஜய்யின் பிகில் திரைப்படத்தோடு வெளியாகியது. ஆனாலும் பிகில் படத்துக்கு நிகரான வெற்றியை கைதி பெற்றது .இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்.

விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு திரைப்படத்தில் பாடல்கள் இல்லை, கதாநாயகி இல்லை, முழுக்க முழுக்க ஆக்ஷன் மட்டுமே இருந்தது. இவ்வாறு ஒரு திரைப்படம் வந்தால் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த வழக்கத்தையெல்லாம் தகர்த்தெரிந்து இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து கைதி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்போது பொன்னியின் செல்வன் பட ப்ரமோஷனில் ஈடுபட்டு வரும் கார்த்தி கைதி 2 திரைப்படத்தைப் பற்றி ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். அதில் “கைதி 2 திரைப்படம் முதல் பாகத்தை விட 10 மடங்கு அதிக பட்ஜெட்டில் உருவாகும். மேலும் கைதி 2 படத்தில் டில்லி மற்றும் ரோலக்ஸ் மோதல் இருக்கும்” என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.