மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி… பின்னணி என்ன?

Photo of author

By Vinoth

மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி… பின்னணி என்ன?

சிவகங்கை மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மத்திய நிதி மந்திரி சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் திடீரென்று தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடலில் உள்ள கட்டி ஒன்றை அகற்ற சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் விசா மோசடி உள்ளிட்ட வழக்குகள் அவர் மேல் தொடரப்பட்டன. அதற்காக அவர் முன் ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளார். இது சம்மந்தமான செய்திகள் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டன. இந்நிலையில் இப்போது கார்த்தி சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.