தொடர்ந்து மூன்று படங்களை ரிலீஸ் செய்த கார்த்தி… அடுத்த படம் பற்றி கொடுத்த அப்டேட்!

0
112

தொடர்ந்து மூன்று படங்களை ரிலீஸ் செய்த கார்த்தி… அடுத்த படம் பற்றி கொடுத்த அப்டேட்!

நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு விருமன், பொன்னியின் செல்வன்  மற்றும் சர்தார் (நாளை ரிலீஸ்) ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற நிலையில் சர்தார் படத்தின் வெற்றிக்காக அவர் காத்திருக்கிறார்.

ஒரே ஆண்டில் இதுபோல மூன்று படங்கள் கார்த்திக்கு ரிலீஸ் ஆனதே இல்லை. அதிலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கும் படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்து கார்த்தியின் 25 ஆவது படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்க உள்ளார். இந்த படத்தை கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என சொல்லப்பட்டது. இதற்கான இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இப்போது படத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு பதிலாக இப்போது தெலுங்கு நடிகரான சுனில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் பற்றி பேசியுள்ள கார்த்தி அந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் முதல் தொடங்கும் என சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இந்த படத்துக்கு ஜப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.