கார்த்தியின் விருமன் படத்தின் இசை வெளியீடு எப்போது? வெளியான தகவல்!

0
279

கார்த்தியின் விருமன் படத்தின் இசை வெளியீடு எப்போது? வெளியான தகவல்!

கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இயக்குநர் அமீர் இயக்கிய பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்தி. அடுத்தடுத்து அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ், பையா, கொம்பன் மற்றும் கைதி போன்ற பல திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகியுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே கொம்பன் என்ற் ஹிட் கொடுத்த இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விருமன் திரைப்படத்தை அடுத்து கார்த்திக்கு பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

Previous articleதாய்ப்பால் கொடுக்கும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம்… தெலங்கானாவில் நடந்த சோகம்!
Next articleபுது கருப்பசாமி கோவிலில் அன்னதான நிகழ்ச்சி! ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன்  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here