விருமன் ரிலீஸில் திடீர் மாற்றம்…. அதிரடியாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

0
368

விருமன் ரிலீஸில் திடீர் மாற்றம்…. அதிரடியாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஏறனவே கொம்பன் என்ற் ஹிட் கொடுத்த இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விருமன் திரைப்படத்தை அடுத்து கார்த்திக்கு பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

இந்நிலையில் முதலில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது 20 நாட்கள் முன் தள்ளி படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுளது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக இருந்த கோப்ரா திரைபடத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதே இந்த முன் கூட்டிய ரிலீஸுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

Previous articleஒப்பந்ததாரரின் கட்டளையை மீறிச் சென்ற பல பேர் மாயம்!! தேடும் பணி தீவிரம்!.. அழுகிய நிலையில் சடலம் மீட்பு?..
Next articleஇந்த இடத்தில் 12 சிறுமிகள் ரயிலில் கடத்தல்! காரணம் இதுதான் போலீசார் தீவிர விசாரணை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here