தெலுங்கில் செம்ம மார்க்கெட் இருந்தாலும்… கார்த்தியின் விருமன் படக்குழு எடுத்த அதிர்ச்சி முடிவு!

0
228

தெலுங்கில் செம்ம மார்க்கெட் இருந்தாலும்… கார்த்தியின் விருமன் படக்குழு எடுத்த அதிர்ச்சி முடிவு!

கார்த்தியின் விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. அதற்கான ப்ரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடந்தது. வெளிநாட்டுக்கு இசைக் கச்சேரிக்காக சென்றுள்ள இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இந்தியா திரும்பியுள்ள நிலையில் அவர், சூர்யா, கார்த்தி, அதிதி மற்றும் இயக்குனர் ஷங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அன்று படத்தின் டிரைலரும் வெளியானது.

இந்நிலையில் வழக்கமாக கார்த்தியின் படங்கள் தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் டப் ஆகி வெளியாகும். தெலுங்கு ஹீரோக்களுக்கு இனையாக கார்த்திக்கும் அங்கு மார்க்கெட் உண்டு. ஆனால் இப்போது கார்த்தியின் விருமன் திரைப்படம் தெலுங்கில் வெளியாகாது என சொல்லப்படுகிறது. ஏனென்றால் சமீபகாலமாக தெலுங்கு படங்களே அங்கு வெற்றி பெறவில்லை என்பதால் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என விருமன் படக்குழு முடிவெடுத்துள்ளதாம். மேலும் தெலுங்கு சினிமாவில் தற்போது ஸ்ட்ரைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாலும் விருமன் ரிலீஸ் ஆகாது என சொல்லப்படுகிறது.

Previous articleதவிட்டுப்பாளையம் அருகே விவசாயின் கண் முன்னே அடியோடு சரியும் வாழைமரம்!..கண் கலங்கி நிற்கும் விவசாயிகள்..
Next articleதூத்துக்குடி மாவட்டத்தில் மன அமைதிக்காக சென்றவருக்கு மரணம்! ஒருவர் கூட உதவிக்கு இல்லாத அவல நிலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here