பீட்சா படத்தின் மூலம் தன்னை இயக்குநராக நிலை நிறுத்து கொண்ட கார்த்திக் சுப்புராஜுக்கு அதற்க்கு பிறகு ஏறுமுகம் தான்.
‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’ என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘ஜகமே தந்திரம்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விக்ரமின் 60வது படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விக்ரமுடன் அவரது மகனான துருவ் விக்ரமும் நடிக்கிறாராம். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘கோப்ரா’ படத்தினை தயாரித்து வரும் லலித் இப்படத்தினை தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.