தமிழகத்தில் சென்ற மாதம் ஆறாம் தேதி 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்துடன் புதுவை, கேரளா, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.அதன்படி கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி தொடங்கிய அசாம் மாநில சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழகத்துடன் சேர்த்து கேரளா மற்றும் புதுவை மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.
இந்தநிலையில், 294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது அதன்படி கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி தொடங்கிய அந்த மாநில தேர்தல் சென்ற 29-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
பிற மாநில தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்ற காரணத்தால், தமிழகம் கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்து இருந்தாலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மற்ற மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்ற காரணத்தால், இந்த மூன்று மாநிலங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கு தடை விதித்திருந்தது. தேர்தல் ஆணையம் அதன்படி கடந்த 29 ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முழுமையாக முடிவுற்ற நிலையில், அன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் அனைத்து விதமான கருத்துக் கணிப்புகளும் வெளியிடப்பட்டன.
இதற்கிடையில், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றது. அதிமுக ஆட்சியை தக்க வைக்குமா அல்லது திமுகவிடம் கொடுக்குமா என்று கேள்வி மக்களிடையே இருந்து இருக்கிறது. இதற்கு என்ன பதில் என்பது நாளை தெரிந்துவிடும்.இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் சுமார் 160 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, இந்தியாவைப் போன்ற பலதரப்பட்ட மக்கள் வளர்ந்து வரும் ஒரு நாட்டில் கருத்துக்கணிப்பு வைப்பதெல்லாம் உபயோகமற்றது. அதனை ஏற்றுக்கொள்ள இயலாது பொதுவாகவே எல்லா கருத்து கணிப்புகளும் ஒரே முடிவுகளை தான் சொல்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.அதேபோல எங்களுக்கு கருத்து கணிப்புகளில் எந்த விதமான நம்பிக்கையும் இல்லை என்றும், ஆனால் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை அடையும் என்றும், வாக்கு இயந்திரங்களில் எந்தவிதமான முறைகேடும் செய்ய இயலாது. அதனை நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.