திமுகவுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பிய கார்த்திக் சிதம்பரம்! கூட்டணியில் விரிசலா? உச்சக்கட்ட கோபத்தில் உடன் பிறப்புகள்

Photo of author

By Anand

திமுகவுக்கு எதிராக சர்ச்சையை கிளப்பிய கார்த்திக் சிதம்பரம்! கூட்டணியில் விரிசலா? உச்சக்கட்ட கோபத்தில் உடன் பிறப்புகள்

தை முதல் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தமிழர் திருநாளாகவும்,பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் தமிழர் திருநாளான இன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் தமிழக எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து பதிவை வெளியிட்டிருந்தார்.அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவு தான் தற்போது கூட்டணி கட்சியான திமுகவுக்கு எதிரான சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கடந்த காலங்களில் ஆட்சி செய்த திமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தமிழ் புத்தாண்டு தொடர்பாக இருவேறு கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளன. அந்த வகையில் திமுக ஆட்சியில் இருந்தபோது கடந்த 2008ஆம் ஆண்டு தை  1ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்து அரசாணை பிறப்பித்தது. ஆனால் அதன் பின்னர் சில ஆண்டுகளில் ஆட்சிக்கு  வந்த அதிமுக கடந்த 2011 ஆம் ஆண்டு மீண்டும் பழைய படியே சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது.

MK Stalin
MK Stalin

இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக மீண்டும் இந்த தமிழ் புத்தாண்டு விவகாரத்தை கையிலெடுத்துள்ளது.அந்தவகையில் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட அரசாணை இயற்றவும் திமுக ஆதரவாளர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.அதை உறுதி செய்யும் வகையில் இந்தமுறை மக்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசு பையில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து இதை எதிர்க்கட்சிகளும்,பொது மக்களும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.திமுகவின் தனிப்பட்ட அரசியலுக்காக தமிழர்களின் உணர்வுகளோடு விளையாட கூடாது எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவின் கூட்டடணி கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது திமுகவினரை கோபமடைய செய்துள்ளது.இது குறித்து அவருடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது,அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். #HappyPongal எனக்கு தமிழ் புத்தாண்டு சித்திரை 1 ஆம் தேதி அன்றுதான் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய வாழ்த்து செய்தியில் பொங்கல் வாழ்த்து கூறியதுடன் எனக்கு எப்பவும் சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என கருத்து தெரிவித்துள்ளதே இந்த கோபத்திற்கு காரணமாக பார்க்கபடுகிறது.

குறிப்பாக தை முதல்நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க நினைக்கும் திமுகவிற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்பியான கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இருப்பது போல அமைந்துள்ளது.இது சுமூகமாக சென்று கொண்டிருக்கும் திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை உண்டாக்குமோ என்ற அச்சமும் இரு கட்சி தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.