கலைஞர் மகள் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அண்ணன் ஸ்டாலின்!

கலைஞர் மகள் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அண்ணன் ஸ்டாலின்!

இந்த கொரோன தொற்றானது ஓராண்டு காலமாக மக்கள் அனைவரையும் பெருமளவு பாடுபடுத்தியது.மக்கள் நலன் கருதி ஏழு மாதங்களுக்கு மேல் ஊரடங்கை அறிவித்தனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் சில தளர்வுகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் முதலில் வழிமுறைகளில் கடைபிடித்தனர்.அதன்பின் கொரோனா என்ற ஒன்றை மறந்து அதனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.

அந்தவகையில் தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பரவ அரம்பித்துவிட்டது.சுகாதாரத்துறைத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறியது,மக்கள் தற்போது தானாகவே வந்து மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதித்து அனுமதியாகிக் கொள்கின்றனர்.அதனால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அதிகப்படியான படுக்கைகள் போடப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி தற்போது கொரோனா தொற்றால் அனுமதிக்கப்படுபவர்கள் எந்த நிலை கொரோனா தொற்று அவர்களுக்கு உள்ளது என்பது கண்டறிய மிகவும் சிரமமாக உள்ளது.இது கொரோனா வின் 3வது அலை என்றும் கூறினார்.அதிகப்படியான கொரோனா தொற்றானது அரசியல்வாதிகளால் பரவுகிறது என்றார்.

பொதுக்கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதிகப்படியானோர் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் கலந்துக்கொள்கின்றனர்.அதனால் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு கொரோனா தொற்று பரவுகிறது.அதேபோல மக்கள் நீதி மய்யத்தின் துணை வேட்பாளர் பொன்ராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதியானது.அதன்பின் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.இது தலைவர்களுக்கு பெரும் அடியாய் இருந்தது.

அதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பல இடங்களில் திமுக பிரச்சாரம் செய்து வருகிறது.அந்தவகையில் திமுக குடும்ப  உறுப்பினர்கள் இந்த ஆட்சி திமுக கைபிடிக்க வேண்டும் என்பதற்காக அவரது குடும்பத்தினர் அனைவரும் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.அதனாலே அவர்களை குடும்ப அரசியல் என அனைவரும் கூறுகின்றனர்.அந்தவகையில் திமுக செயலாளரான கனிமொழிக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது.கனிமொழி தன்னை வீட்டினுள்ளே  தனிமைபடுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment