சபரிமலை ஐயப்பன் மனித வாழ்வை திறந்து சபரிமலையில் ஐக்கியமானார். அவரைக் காண வளர்ப்பு தந்தையான பந்தள மன்னர் அடிக்கடி சபரிமலைக்கு செல்வார்.
சபரிமலைக்கு செல்லும் பாதை மிகவும் மோசமாக இருக்கும் அவருடைய இருப்பிடத்தை அடைய பல தினங்கள் தேவைப்படும் மகனை காண்பதற்காக செல்லும் தந்தை பண்டங்களை கொண்டு செல்வார். நீண்ட தினங்கள் செல்ல வேண்டும் என்பதால் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக நெய் பண்டங்கள் கொண்டு செல்வார் என்று சொல்லப்படுகிறது.
நெய்யால் செய்த பண்டங்கள் அதிக நாள் கெட்டுப் போகாமல் இருக்கும் இந்த வழக்கத்தின் அடிப்படையில் தான் பிற்காலத்தில் ஐயப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டு செல்லும் பழக்கம் உண்டானது.