கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருப்பது திமுகவா??

Photo of author

By Parthipan K

அண்மையில் மிகவும் சர்ச்சைக்குள்ளான கந்த சஷ்டி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்வாசன் தற்போது கொடுத்துள்ள வாக்குமூலம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பர் கூட்டம் எனும் ஒரு யூடியூப் சேனலில் கடந்த வாரம் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது அதில் தமிழர் கடவுளாக வணங்கப்படும் முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசம் கடுமையாக விமர்ச்சிக்கப்பட்ட நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இது இந்து மக்களின் மனதை புண்படுத்துவதாகவும் ,வழிப்பாட்டு முறையை கொச்சைப்படுத்துவதாகவும் சென்னை மத்தியகுற்றப்பிரிவில் பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக செந்தில்வாசன், சுரேந்திரன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் சென்னையில் உள்ள கருப்பர் கூட்ட அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

சைபர் கிரைம் போலிசாரால் மத உணர்வை புண்படுத்தும் வகையில் 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவைகள் அனைத்தும் உடனடியாக நீக்கப்பட்டதுடன் அந்த யூடியூப் சேனல் முடக்கப்பட்டது.

செந்தில் வாசனுக்கு 4 நாள் போலீஸ் காவல் வழங்கி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் தற்போது விசாரணையில் செந்தில் வாசன் திமுக வின் IT – Wing ல் செயல்படுவதாக கூறி இருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அண்மையில் திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் கருப்பர் கூட்டத்திற்கும் எங்களுக்கும்,எங்கள் கட்சிக்கும் தொடர்பு இல்லை ,நாங்கள் இந்து மதத்திற்கு எதிராவனர்கள் கிடையாது எங்கள் மீது திட்டமிட்டு பழி சுமத்துகிறார்கள் என்று அறிக்கை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.