Karuppu kavuni rice benefits in tamil : கருப்பு கவுனி அரிசி நன்மைகள்!

Photo of author

By Jeevitha

கருப்பு கவுனி அரிசி – Black rice Benefits in Tamil

கருப்பு கவுனி அரிசி ஒரு காலத்தில் அரசர்களும் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இது அதிக மருத்துவ குணம் நிறைந்த அரிசியாக இருந்ததால் அரசர்கள் மட்டும் பயன்படுத்தி வந்தனர். இந்த அரிசியின் மருத்துவத்தை அறிந்ததால் சாமானிய மக்களும்  அரிசியை உண்பதற்கு ஆரம்பித்ததால். இந்த  அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்த கருப்பு கவுனி அரிசியினை தடை செய்தார்கள். இதனால் இது தடை செய்யப்பட்ட அரிசி என்றும் கூறப்படுகிறது.

கருப்பு கவுனி அரிசியில் உள்ள சத்துக்கள்

புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் இ, நியாசின், லுடீன், கால்சியம், மெக்னீசியம், ஆன்ட்டி ஆக்சிடென்ட், அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்கள் கருப்பு கவுனி அரிசியில் நிறைந்துள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அதிகம் உள்ளது. கவனி அரிசி வகைகளில் உயர்ந்த அரிசியாக காணப்படுகிறது.

Black rice Benefits in Tamil கருப்பு கவுனி அரிசி நன்மைகள்
Black rice Benefits in Tamil கருப்பு கவுனி அரிசி நன்மைகள்

கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆந்தோசைனின் மற்றும் நார்ச்சத்து இது உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொலஸ்ட்ரால்களை வெளியேற்றுகிறது.

2. கேன்சர் வராமலும் தடுக்கிறது இதில் இருக்கக்கூடிய ஆந்தோசைனின் நிறமி சத்து அதிகம் இருப்பது தான் காரணம். இது ஒரு சிறந்த ஆன்ட்டி கேன்சர் ஆக செயல்படுகிறது. இது புற்றுநோய் உண்டாக்கக்கூடிய காரணிகளை அழிப்பதோடு மட்டுமல்லாமல் புற்றுநோய் செல்களை வளர்வதையும் தடுக்கிறது.

4. செரிமானம் சீராகும்

100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் 4.9 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மற்ற அரிசிகளை விட நான்கு மடங்கு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் நாம் உண்ணக்கூடிய உணவு எளிதில் ஜீரணம் ஆகிறது.

5. கல்லீரல் சுத்தப்படுத்துதல்

ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் அமினோ அமிலங்கள் உடலில் இருக்கக்கூடிய கழிவுகளை வெளியேற்றி கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மேலும் கல்லீரலில் உள்ள செல்களை புதுப்பிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

6. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அரிசி வகையில்  குறைந்த கார்போஹைட்ரேட் அதிக அளவிலான நார்ச்சத்தும் கொண்ட கருப்பு கவுனி அரிசி உண்பதால் லோ லைசமிக் இன்டெக்ஸ் இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவது தடுக்கப்படுகிறது.

மேலும் கருப்பு கவுனி அரிசி உண்பதால் ரத்த சோகை போன்ற நோய்கள் குணமாகிறது. அதனையடுத்து ரத்தத்தின் அளவை உடலில் அதிகப்படுத்துகிறது. கருப்பு கவுனி அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கருப்பு கவுனி அரிசி தினமும் சாப்பிடலாமா?

கருப்பு கவுனி அரசி குறைந்த பக்க விளைவுகள் அல்லது சிலருக்கு முற்றிலும் இல்லாத உணவாகும். ஆனால் இது ஒவ்வொருவரின் உடல் அமைப்பை பொறுத்து மாறுபடும். அதிக அளவில் கவுனி அரசி சாப்பிடும் நபர்களுக்கு உண்டான பக்க விளைவுகளில் முக்கியமானது செரிமான பிரச்சனையாகும். அதனால் உடலில் செரிமான கோளாறு உள்ளவர்கள் கவுனி அரிசியை சாப்பிடும் முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.