சின்னசாமி விலகலுக்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா!

0
113

தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கிறது இதனால் தமிழகத்தின் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முக்கிய கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கி வருகிறார்கள்.அந்த விதத்தில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில், ஒரு பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தாங்கள் சசிகலாவின் காலில் விழுந்தது உண்மையா இல்லையா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதோடு பாம்பைப் போல கூறிச் சென்றது தாங்கள் தானா அல்லது வேறு யாருமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திமுக என்பது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அது ஒரு குடும்ப கட்சியாக மாறிவிட்டது என்று விமர்சனம் செய்திருக்கிறார். இப்படி ஒருவரை மாற்றி ஒருவர் தொடர்ந்து விமர்சனங்களை செய்து கொள்கிறார்கள்.இந்தநிலையில், திமுகவில் இருந்து விலகிய அந்த கட்சியின் மாநில விவசாய அணி செயலாளர் கரூர் சின்னசாமி அதிமுகவில் இணைந்தார். இதுதொடர்பாக நேற்றைய தினமே அவர் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதனை அடுத்து திமுக தலைமை அவரை அந்த கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைத்தது.

கரூர் மாவட்டத்தை பொருத்தவரையில் செந்தில் பாலாஜி வந்ததிலிருந்தே சின்னசாமிக்கு பெரிய அளவில் மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த கரூர் சின்னசாமி வெகு காலமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அடுத்து அவரிடம் ஸ்டாலின் தொலைபேசியில் உரையாற்றி இருக்கிறார். அப்போது மன்னித்துக்கொள்ளுங்கள் தலைவரே இதற்குமேல் அவருடன் இணைந்து நான் பணியாற்ற இயலாது என்று தெரிவித்திருக்கிறார் கரூர் சின்னசாமி.

அதோடு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் அந்த வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாத நபர்களிடம் ஸ்டாலின் நேரடியாக தொலைபேசியில் பேசியிருக்கிறார். அவர்களில் ஒருவர்தான் சின்னசாமி இந்தநிலையில், சின்னசாமி தெரிவித்ததாவது மன்னிச்சுக்கோங்க தலைவரே இனிமேல் அவரோட என்னால் வேலை செய்ய இயலாது என்று பகிரங்கமாகவே தெரிவித்துவிட்டார் என சொல்லப்படுகிறது.

அதன் பின்னரே திமுகவின் உயர்நிலை குழுவின் உறுப்பினர் எ.வ வேலு அவர்களும் சின்னசாமி இடம் உரையாற்றியிருக்கிறார். இதிலும் சமாதானம் ஆகாத சின்னசாமி இனிமேலும் செந்தில் பாலாஜியுடன் இருந்து என்னால் அவமானத்தை சகித்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்து இருக்கிறார் சின்னசாமி. இது போன்ற சூழ்நிலையில் தான் நேற்று அதிமுகவில் இணையப் போவதாக அறிவிப்பை கொடுத்திருக்கிறார் சின்னசாமி. அதன் பிறகு முறைப்படி அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள் கரூர் மாவட்ட திமுக வட்டாரத்தில்.

Previous articleபீடிக்கு நூல் கட்டும் திமுக வேட்பாளர் ! எடப்பாடியாரை எதிர்ப்பதால் ஏற்பட்ட பரிதாபம்!?
Next articleஅண்ணியாருக்கு என்ன தான் ஆச்சு? பிரேமலதாவால் தலையில் அடித்துக் கொள்ளும் தேமுதிக நிர்வாகிகள்!