பிரபல தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்காட்டிருக்கிறது.
வேலை வகை: வங்கி வேலை
நிறுவனம்: கரூர் வைஸ்யா வங்கி(KVB)
கல்வித் தகுதி:
கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வயது வரம்பு:
வங்கி அறிவித்துள்ள பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 40 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.அரசு விதிப்படி வயது வரம்பில் சில தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மாத சம்பளம்:
பணிக்கு தேர்வாகும் நபர்கர்களுக்கு மாதம் ரூ.30,000/- ஊதியம் வழங்கப்படும் என்று வங்கி அறிவிப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்வு முறை:
**நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
தகுதி,விருப்பம் இருப்பவர்கள் www.karurvysyabank.co.in என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கூடுதல் விவரங்கள் அறிய https://www.karurvysyabank.co.in/Careers/docs/Eligibility%20Criteria%20-%20Relationship%20Manager%20(Sales)-BBU.pdf என்ற லிங்கை கிளிக் செய்யலாம்.