இவ்வளவு மருத்துவ பயன்கள் கொண்டதா கசகசா? ஆனால் மற்ற நாடுகளில் இதற்கு தடை ஏன்?

Photo of author

By Priya

Kasa kasa benefits: கசகசா இது இல்லாமல் நமது இந்திய அசைவம் உணவு முழுமை பெறாது என்பது தான் உண்மை. அனைவரின் வீட்டு அஞ்சளை பெட்டியிலும் மசாலா பொருட்களுடன் கட்டாயம் இது இருக்கும். ஆனால் மற்ற நாடுகளுக்கு இதன கொண்டு செல்வது என்பது சிரமமான விஷயம் தான். முக்கியமாக வளைகுடா நாடுகளில் இந்த கசகசா கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

மேலும் அந்த நாட்டில் கசகசா பயன்படுத்துவதும் கிடையாது. அப்படி சென்றால் அவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும். இந்திய நாட்டில் பயன்படுத்தப்படும் இந்த கசகசா ஏன் அந்த நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் மருத்துவப்பயன்கள் பற்றி இந்த பதிவில் (Poppy seeds benefits in tamil)
காணலாம்.

கசகசா

முதலில் கசகசா எப்படி பெறப்படுகிறது என்று பார்த்தால் இந்த கசகசா வை நாம் பாப்பி செடிகளில் இருந்து தான் பெறுகிறோம். அதனால் தான் இந்த கசகசா ஆங்கிலத்தில் Poppy seed என்று அழைக்கப்படுகிறது. இந்த பாப்பி செடிகளில் உள்ள விதை தான் இந்த கசகசா. இந்த விதைகள் முற்றிய பிறகு எடுக்கப்படுவது தான் கசகசா.

ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது?

இந்த பாப்பி செடிகளில் விதைகள் முழுமை அடைவதற்கு முன்னே அந்த விதைப்பைகளில் சிறு சிறு கீறல்கள் இட்டால் அதில் இருந்து பால் போன்று திரவம் சுரக்கும். அதன் பெயர் தான் ஓபியம். இந்த ஓபியம் என்பது அபின், ஹெராயின், கஞ்சா, பான் மசாலா,புகையிலை போன்று போதைப்பொருட்களில் ஒன்றாகும். அதனால் இந்த கசகசா விதைகளை பயன்படுத்தி இந்த செடிகளை உற்பத்தி செய்ய முடியும் என்று வளைகுடா நாடுகளில் இதற்கு தடை விதித்துள்ளன.

Kasa kasa benefits

இந்த செடிகள் இந்தியா, பாகிஸ்தான் போன்ற குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் தான் பயிரிடப்படுகிறது. அதுவும் அரசு அனுமதி கொடுத்த மாநிலங்களில் மட்டும் குறிப்பிட்ட அளவு மட்டும் தான் பயிரிடப்படுகிறது.

மருத்துவ பயன்கள்

இதில் ஓபியம் எடுக்க முடியும் என்ற போதிலும் இந்தியாவில் ஏன் இதனை உற்பத்தி செய்கிறார்கள் என்று பார்த்தால் இதன் மருத்துவ பயன்கள் அதிகம்.

இந்த கசகசாவில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, தியாமின், ஃபோலேட், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம்,வைட்டமின்கள் ஆகியவை அதிகம் உள்ளது.

மேலும் இது ஞாபக மறதியை குணப்படுத்துகிறது. இரவு நேரத்தில் தூக்கம் இல்லாமல் இருப்பவர்கள் கசகசா சாப்பிட்டால் தூக்கமின்மை நோய் சரியாகும்.

செரிமானம் பிரச்சனையை குணப்படுத்துகிறது. உடல் நரம்புகளுக்கு வலிமை கொடுக்கிறது.

கசகசா உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இதனால் இதயத்தின் பாதுகாப்பிற்கு உகந்தது.

கசகசா வை பால் சேர்த்து ஊற வைத்து முகத்தில் அப்ளை செய்து வர சரும பிரச்சனைகள் தீரும்.

மேலும் இந்த கசகசா வை 1 ஸ்பூன் அளவு எடுத்து அதனை கழுவிய பிறகு தான் உணவில் சேர்த்து சமைக்க வேண்டும்.

மேலும் படிக்க: சிலேட்டு குச்சி, விபூதி சாப்பிடுபவரா நீங்கள்? அப்படி என்றால் இதனை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்..!!