சிவாவின் காசேதான் கடவுளடா படப்பிடிப்பு நிறைவு! விரைவில் படம் வெளியாகிறது!

Photo of author

By Parthipan K

சிவாவின் காசேதான் கடவுளடா படப்பிடிப்பு நிறைவு! விரைவில் படம் வெளியாகிறது!

நடிகர் சிவா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் காசேதான் கடவுளடா.இந்தத் திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது.ப்ரியா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார்.மேலும் இந்தத் திரைப்படத்தில் ஊர்வசி,யோகிபாபு,கருணாகரன்,விஜய் டிவி புகழ் மற்றும் ஷிவாங்கி ஆகியோரும் நடிக்கின்றனர்.இந்த படத்தை ஆர்.கண்ணன் இயக்குகிறார்.அவரே இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

காசேதான் கடவுளடா என்ற பெயரில் 1972ம் ஆண்டு நடிகர் முத்துராமன் நடிப்பில் ஏற்கனவே திரைப்படம் வெளியானது.அந்தப் படத்தைத் தழுவியே இந்த திரைப்படமும் உருவாகி வருகிறது.இந்தத் திரைப்படத்திற்கு என்.கண்ணன் இசையமைக்கிறார்.காசேதான் கடவுளடா திரைப்படம் 1972ம் ஆண்டு முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது வெளியாகவிருக்கும் இந்த படமும் நகைச்சுவை கலந்த படமாகவே இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதனிடையே தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை 16ம் தேதி தொடங்கியது.சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.ஒரே கட்டத்தில் படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது.

கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக பொது முடக்கத்தில் இருந்த நேரத்தில் படக்குழு இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவாக முடித்துள்ளனர்.இது குறித்து பேசிய காசேதான் கடவுளடா படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.கண்ணன் தன்னுடைய முந்தைய திரைப்படங்களை தான் விரைவாக முடித்துள்ளதாகவும் மேலும் அதேபோல் இந்த படத்தையும் விரைவாக முடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

படத்தில் பணிபுரிந்த நடிகர்,நடிகைகளின் ஒத்துழைப்பே இதற்கு காரணம் என்று அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.மேலும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது என்றும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.