நீட் தேர்வு ரத்து என அனிதா உயிரை வாங்கியவர்கள்! செஸ் பாட்டுக்கு ஆடிட்டு அடுத்த மரணத்தில் அரசியல் செய்ய போயாச்சு – நடிகை கஸ்தூரி 

Photo of author

By Anand

நீட் தேர்வு ரத்து என அனிதா உயிரை வாங்கியவர்கள்! செஸ் பாட்டுக்கு ஆடிட்டு அடுத்த மரணத்தில் அரசியல் செய்ய போயாச்சு – நடிகை கஸ்தூரி

கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய ஆளும் கட்சியான திமுக பல்வேறு கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்திருந்தது.அவற்றில் நீட் தேர்வு விலக்கு பெறுவதும் முக்கியமான வாக்குறுதியாக கருதப்பட்டது.அப்போதே திமுகவின் இந்த வாக்குறுதி தேர்தலுக்கானது என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன.

அதற்கு அப்போது பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை எப்படி ரத்து பண்ணனும் என எங்களுக்கு தெரியும்,அதற்கான ரகசியம் தங்களிடம் இருப்பதாக மேடைகளில் பேசியிருந்தார்.இதையும் நம்பி தமிழக மக்கள் வாக்களித்து திமுகவை வெற்றி பெற செய்தனர்.ஆனால் தேர்தல் வாக்குறுதிகளில் கொடுத்த எதையும் திமுக நிறைவேற்றவில்லை என தொடர்ந்து எதிர்க்கட்சிகளும்,பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதில் குறிப்பாக பெண்களுக்கான உதவித்தொகை மற்றும் இந்த நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகள் எப்போ நிறைவேற்றப்படும் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.அந்தவகையில் கடந்த ஞாயிற்று கிழமை திட்டமிட்டபடி நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது.இதனைத்தொடர்ந்து திமுக மீதான விமர்சனங்கள் மேலும் அதிகரித்துள்ளன.

சமூக விஷயங்களில் அவ்வப்போது அதிரடி பல்வேறு அதிரடி கருத்துக்களை கூறி வரும் நடிகை கஸ்துாரி, நீட் தேர்வு ரத்து குறித்த திமுகவின் தற்போதைய நிலைப்பாட்டை கிண்டலடித்துள்ளார்.அந்த வகையில் நடிகை கஸ்தூரி அவர்களும் நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவை விமர்சனம் செய்து ட்விட் செய்துள்ளார்.அதில் நீட் தேர்வு நடந்து கொண்டிருக்க இவங்க செஸ் ஆடிட்டு இருக்காங்க’ என நடிகை கஸ்துாரி கிண்டல் செய்துள்ளார்.

மேலும் அதில் அவர் கூறியுள்ளதாவது: ‘நீட் தேர்வு வராது; வரவிட மாட்டோம்’ என சொல்லியே அன்று அனிதா உடைய உயிரை வாங்கியவர்கள் அதே வாக்குறுதியை சொல்லி ஓட்டும் வாங்கினர். இப்போது ‘நீட்’ தேர்வு அது பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் பாட்டுக்கு ‘செஸ்’ ஆடிக்கிட்டே, அடுத்த மரணத்தில் அரசியல் செய்ய போயாச்சு; என்ன மாடலோ? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.