தமிழின் ஆழத்தை அறிந்து கவிதை இயற்றுவதிலும் பாடல்களை இயற்றுவதிலும் திறமைமிக்க தமிழ் கவிஞர் கவியரசர் கண்ணதாசன் அவர்களுடைய வாழ்வின் கடைசி தருணங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார் சரோஜாதேவி அவர்கள்.
கண்ணதாசனை கடைசியாக சந்தித்த சரோஜாதேவி அவர்கள் அங்கு நடந்த நிகழ்வை தெரிவித்திருப்பதாவது :-
தமிழகத்தில் மிகப்பெரிய கவிஞராக திகழக்கூடிய கண்ணதாசன் அவர்கள் எப்பொழுதும் என்னுடைய மகளின் உடைய பேச்சை கேட்கும் பொழுது மழலை தமிழ் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் என் மகளுடைய தமிழானது தன்னை சொக்க வைப்பதாகவும் கூறுவார் என தெரிவித்திருக்கிறார். மேலும் எப்பொழுது பெங்களூர் வந்தாலும் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு உணவு தனது வீட்டில் இருந்து தான் செல்லும் என தெரிவித்துள்ளார்.
திடீரென ஒரு நாள் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை கேட்ட சரோஜாதேவி அவர்கள் நேரில் சென்று அவரை கண்ட பொழுது, எப்பொழுதும் மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டிருப்பவர் மிகவும் சோர்ந்து இருந்திருக்கிறார். ஏன் இப்படி இருக்கிறீர்கள் என சரோஜாதேவி அவர்கள் கேட்டதற்கு, நான் இப்பொழுது சிரிக்க வேண்டும் அவ்வளவு தானே எனக்கு சொல்லி வாய்விட்டு சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறார். இதைப் பார்த்து பயந்த சரோஜாதேவி அவர்கள் டாக்டர் வந்து திட்டப் போகிறார் கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள் என அவரை சாந்தப்படுத்தியதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் தன் விரைவாக பெங்களூர் வருவதாகவும் தனக்கு உணவு தயார் செய்து வைக்கும் படியும் கவிஞர் கண்ணதாசன் கூறியதாகவும் இவை அனைத்தும் தனக்கு மிகவும் பசுமையான நினைவுகளாக மனதில் பதிந்துள்ளன என சரோஜாதேவி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.