#BREAKING கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற ஹெலிகாப்டர் விபத்து 

#BREAKING கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற ஹெலிகாப்டர் விபத்து

உத்தரகாண்ட்

கேதர்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற ஹெலிகாப்டர், கீழே விழுந்து நொறுங்கியதில் தமிழ்நாட்டை சேர்ந்த சுஜாதா(56), பிரேம்குமார்(63), கலா(60) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Chopper crash

உத்தரகாண்ட்டின் குப்தகாசியிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேதார்நாத் கோயிலுக்குச் செல்வதற்காக 4 பக்தர்கள் தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டரில் 2 மாலுமிகள் இருந்தனர்.

இவர்கள் கேதார்நாத் அருகே சென்று கொண்டிருந்தபோது பாடா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த தமிழர்கள் உட்பட 6 பேரும் உயிரிழந்ததாக உத்தரகாண்ட் முதலமைச்சரின் சிறப்பு முதன்மை செயலாளர் அபினவ் குமார் அறிவித்துள்ளார்.

#Uttarakhand | #Kedarnath | |#KedarnathHelicopterCrash

Leave a Comment