உலகளவிலான இரும்பு மனிதன் போட்டியில் வெற்றிபெறத் தீவிரம் – கன்னியாகுமரி இரும்பு மனிதன் பயிற்சி!!

0
194
#image_title

பஞ்சாபில் நடைபெற்ற அகில உலக அளவிலான இரும்புமனிதன் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் கலந்து வெள்ளிபதக்கம் பெற்ற கன்னியாகுமரி மாவட்ட இரும்பு மனிதன் கண்ணன், ஸ்பெயினில் நடைபெறும் 2023 ஆம் ஆண்டிற்கான அர்னால்டு கிளாசிக் இரும்புமனிதன் போட்டிக்கு இந்தியா சார்பில் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு.

நாகர்கோவில் அருகே சங்குதுறை பீச்சில் 1டன் வள்ளத்தை கடற்கரை மணலில் வைத்து இழுத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் இரும்பு மனிதன் கண்ணனின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது‌. இவர் தனது போட்டிக்காக புது புது விதமான இளைஞர்களுக்கு உற்சாகம் மூட்டும் பயிற்ச்சியை செய்து வருகிறார் இது அணைவரையும் கவர்ந்து வருகிறது‌.

பல சாதனைக்களுக்கு சொந்தக்காரரான இரும்பு மனிதன் கண்ணன் கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாபில் அகில உலக அளவிலான இரும்புமனிதன் போட்டி நடந்தது. தமிழ்நாடு சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுட்டிவிளையை சேர்ந்த கண்ணன் கலந்து கொண்டு வெள்ளிபதக்கம் பெற்றார்.

2023 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்புமனிதன் போட்டி வரும் அக்டோபர் மாதம் 13,14,15,தேதிகளில் ஸ்பெயினில் வைத்து நடைபெறுகிறது. இந்தியா சார்பில் போட்டியில் கலந்து கொள்ள கண்ணன் தேர்வாகி உள்ளார்.

இதற்காக நேற்று நாகர்கோவில் அருகேயுள்ள சங்கு துறை பீச்சில்
இரும்புமனிதன் கண்ணன் 1டன் எடை கொண்ட வள்ளத்தை standing மற்றும் sitting முறையில் கடற்கரை மணலில் இழுத்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.

Previous article+2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
Next articleரிஷிவந்தியம் பகுதியில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மற்றும் மக்காச்சோளப் பயிர்கள் சேதம்.. விவசாயிகள் வேதனை!