உங்களுக்கு பணப்பிரச்சனை வராமல் இருக்க இந்த 2 பொருட்களை மட்டும் பணப்பெட்டியில் வையுங்கள்!! அனுபவ உண்மை!!

0
107
#image_title

உங்களுக்கு பணப்பிரச்சனை வராமல் இருக்க இந்த 2 பொருட்களை மட்டும் பணப்பெட்டியில் வையுங்கள்!! அனுபவ உண்மை!!

நம் அனைவருக்கும் எப்பொழுதும் பணத்தோவை இருந்து கெண்டே இருக்கும்.பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம்.இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம்.

பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை உரிய முறையில் சேமிப்பது.சேமிப்பு ஒன்று இல்லாவிட்டால் எதிர்கால வாழ்க்கை மிகவும் கஷ்டமானதாகவும்,கேள்வி குறியானதாகவும் மாறிவிடும்.இதை மனதில் வைத்துக்கொண்டு எவ்வளவு தான் கஷ்டப்பட்டு சேமித்தாலும் அவை ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது என்ற ஆதங்கத்தில் இருக்கும் நபர்கள் வீண் விரையங்கள் ஏற்படுவதை தவிர்க்க சில வழிமுறைகளை கடைபிடிப்பது மிகவும் முக்கியம்.

நமக்கு செல்வத்தை வாரி கொடுப்பவர் மகாலட்சுமி தாயார்.அவர் மனம் குளிரும்ப்படி செய்தால் போதும் வீண் விரையங்கள் தவிர்க்கப்பட்டு பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.பொதுவாக மகாலட்சுமி தாயார் வாசனை நிறைந்த பொருட்களில் குடியிருப்பார் என்பது ஐதீகம்.அதன்படி அதிக வாசனை நிறைந்த இலைகளான வெற்றிலை,திருநீற்றுப்பச்சிலை வீட்டு பணப்பெட்டியில் வைப்பதினால் பணக்கஷ்டம் நீங்கி செல்வம் பெரும்.

3 வெற்றிலை எடுத்து அதில் திருநீற்றுப்பச்சிலை சிறிதளவு மற்றும் பச்சை கற்பூரம் 1 சேர்த்து மடித்து கொள்ளவும்.இதை வீட்டில் பணப்பெட்டி இருக்கும் இடத்தில் வைக்கவும்.இப்படி செய்தால் நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் வீண் விரையம் ஆகாமல் இருக்கும்.அதேபோல் இந்த வெற்றிலை + திருநீற்றுப்பச்சிலை வாடிவிட்டால் அதனை மாற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.காரணம் வாடிய பொருளில் மகாலட்சுமி தாயார் குடி இருக்க மாட்டார்.

சம்பளப்பணம் வந்தவுடன் அதை வெற்றிலை + திருநீற்றுப்பச்சிலை + பச்சை கற்பூரம் ஆகியவற்றை பொட்டலம் செய்து வைத்திருக்கும் பணப்பெட்டியில் வைத்து அடுத்த நாள் அதில் இருந்து பணத்தை எடுத்து அத்தியாவசிய செலவுகளை செய்யலாம்.அதேபோல் இந்த பொட்டலத்தை மாற்றி வைக்க உரிய நாள் மற்றும் நேரம் இருக்கிறது.

அதன்படி மாதத்திற்கு ஒரு முறை வெள்ளியன்று சுக்கிர ஓரையான காலை 6 முதல் 7 வரை அதேபோல் மதியம் 1 முதல் 2 வரை,இரவு 8 முதல் 9 வரை ஆகிய நேரத்தில் மாற்றி வைக்கலாம்.இதை தொடர்ந்து கடைபிடித்து வந்தோம் என்றால் பணக்கஷ்டம் நீங்கி அதிகளவில் பணம் பெருகும்.

Previous articleடெங்கு அறிகுறி இருப்பவர்கள் இதை உடனே பருகுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!
Next articleவீட்டில் ஒரே பல்லி தொல்லையா இருக்கா? கவலையை விடுங்கள்.. இதை ட்ரை பண்ணுங்க!! 100% தீர்வு நிச்சயம்!!