குழந்தைகளுக்கு பரவும் புதியவகை தொற்று.. எச்சரிக்கை செய்த சுகாதரத்துறை!!

Photo of author

By Gayathri

தமிழகத்தில் தற்பொழுது பொன்னுக்கு வீங்கி நோய் அதிகமாக பரவி வருவதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் இந்த நோயிற்கான அறிகுறிகளாக காதுகள் மற்றும் தாடைகளிடையே வீக்கம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் உமிழ்நீர் சுரப்புகளில் ஏற்படும் இத்தகைய வீக்கம் மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றும், காய்ச்சலும் வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியின்மை, தலைவலி, கன்னங்களில் வீக்கம், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுமாம்.

இந்த நோய் பரவக்கூடியது ஆகும். இது ஒருத்தரிடம் இருந்து மற்றொருவரிடம் கபம், சளி மற்றும் நெருக்கமான தொடர்பு மூலமாக பரவக்கூடியது. இந்த நோய்க்கு தானாகவே சரியாகிவிடும் தன்மையும் உள்ளது.எனினும், ஒரு சிலருக்கு இது மூளை காய்ச்சல் ஆகவோ அல்லது விரை வீக்கமாகவோ தீவிரம் அடையலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடலை வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய தண்ணீரும், திரவ உணவுகளும் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் இந்த தொற்றுக்கான மாத்திரைகளையும் வைட்டமின் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

வேறு ஏதேனும் பிரச்னைகள், அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். இந்நிலையில் தமிழகத்தில் பொன்னுக்கு வீங்கி நோய் அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் இந்த நோயால் மொத்தம் 1281 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.