வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ நம்மிடம் பணம் இருக்க வேண்டியது அவசியம்.பணம் இருந்தால் மட்டுமே சமுதாயத்தில் மதிப்புடன் வாழ முடியும்.தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ ஒவ்வொரு நாளும் கடுமையாக உழைத்து பணத்தை ஈட்டுகின்றோம்.ஆனால் சில எதிர்வினைகளால் நாம் சம்பாதிக்கும் பணம் கரைந்துவிடுகிறது.
சம்பளத்தை வாங்கி பர்ஸில் போட்டால் அடுத்த நொடியே ஆயிரம் செலவுகள் நமக்கு காத்துக் கொண்டிருப்பதால் பணத்தை சேமிக்க முடியாமல் போய்விடுகிறது.வாஸ்து சாஸ்திரப்படி நீங்கள் சில விஷயங்களை பின்பற்றும் பொழுது செலவு குறைந்து அதன் வரவு அதிகரிக்கும்.
சிலர் பர்ஸில் சோம்பு,பட்டை,ஏலக்காய்,பச்சை கற்பூரம் போன்ற பொருட்களை வைப்பார்கள்.லட்சுமி தேவிக்கு உகந்த பொருட்களான இவை பணத்தின் வரவை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
அதேபோல் பர்ஸில் கிராம்பை வைத்தால் செலவு குறைந்து பண வரவு பன்மடங்கு அதிகாரிக்கும்.கிராம்பில் உள்ள நேர்மறை ஆற்றல் பணத்தின் வரவை அதிகரிக்க செய்கிறது.கிராம்பை பர்ஸில் வைத்தால் பண இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.பர்ஸில் கிராம்பு வைத்தால் பணம் குறையாமல் இருக்கும் என்பது ஐதீகம்.
கிராம்பை பர்ஸில் வைப்பதற்கு முன் அதனை கோயில் அல்லது பூஜை அறையில் வைத்து அர்ச்சனை செய்த பின்னரே வைக்க வேண்டும்.இவ்வாறு செய்வதால் நேர்மறை ஆற்றல் அதிகரித்து பணம் சார்ந்த பாதிப்புகள் குணமாகும்.கிராம்பை ஒரு ஜிப் லாக் கவரில் போட்டு பர்ஸில் பணம் வைத்துள்ள அறையில் தான் வைக்க வேண்டும்.மாதத்திற்கு ஒருமுறை பழைய கிராம்பை நீக்கிவிட்டு புதியதை வைக்க வேண்டும்.