டிஃபரண்ட் கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Photo of author

By Parthipan K

 நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஹிந்தி படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக அந்த இந்தி கதைக்கு ஏற்றவாறு தன் உடல் அழகை மாற்றி அந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 தற்போது தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்கு இன்னும் ஒரு பட வாய்ப்பும் அமையவில்லை. அதனால் நடிகை கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர்களிடம் தான் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதாக நேரடியாக கூறியுள்ளார். தயாரிப்பாளர்களும் ஒல்லியாக  இருக்கும் உங்களை நம்பி படம் தயாரிக்க நாங்கள் விரும்பவில்லை என்று நடிகையிடம் நேரடியாக கூறி விட்டனராம்.

 தயாரிப்பாளர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக கீர்த்தி சுரேஷ் தன் உடல் எடையை தற்போது அதிகரித்து வருகிறார். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தன் வீட்டில் Exercise செய்யும் வீடியோ வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது  என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது விட தற்சமயம் அவர் திரைப்பட வாய்ப்புகளுக்காக தன் உடல் எடையை மீண்டும் அதிகரித்து வருகிறார்.

 தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தெலுங்கு மொழியில் ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தேசிய விருது வாங்கியுள்ளார் என்பது பாராட்டுதலுக்குரியது.